Um Samugam Munne Pogum | உம் சமூகம் | Rev. Samson Cephas John | John Jebaraj

Samson Cephas John

Key: Gm #37
Font
 உம்  சமூகம்  முன்னே  போகும்
 எதற்கும்  பயமில்லையே
 உம்  ஆவி  வெல்லும்  கொல்லும்
 பார்வோன்  தடையில்லையே  -  2
 
 இரதங்கள்  முறித்து  வில்லை  ஒடித்தீர்
 உம்  முன்னே  நிற்பவன்  யார்
 செங்கடல்  பிரிந்து  சுவர்போல்  நின்றதே
 உம்மை  எதிர்ப்பவன்  யார்  -  2
 
 எல்ஷடாய்  எலோஹீம்...  யாவே  எலோஹீம்
 எல்ஷடாய்  எலோஹீம்...  யாவே  எலோஹீம்

Verse 1

 என்  கூக்குரல்  கேட்டு  பெருமூச்சைக்  கண்டு
 உம்  தோளில்  எனை  ஏற்றினீர்
 மேகத்தாலும்  அக்னி  ஸ்தம்பத்தாலும்
 என்  தேகம்  நீர்  மூடினீர்
 உழைப்பும்  இல்லை  உடல்  களைப்பும்  இல்லை
 உம்  அப்பம்  எனக்கூட்டினீர்
 என்  வஸ்திரமும்  பாத  இரட்சைகளும்
 மகிமையால்  புதிதாக்கினீர்  -  2

Verse 2

 எந்தனின்  பாதம்  பட்ட  உடனே
 யோர்தானும்  விலகிடுமே
 உம்  யோசனையாலே  எக்காளம்  போதும்
 எரிகோவும்  விழுந்திடுமே
 என்  பட்டையத்திற்கு  தப்பினதெல்லாம்
 கல்மழைக்கிரையானதே
 என்  வார்த்தையினாலே  சூரியனும்  சந்திரனும்
 ஓரிடம்  நின்றிடுமே  -  2

Verse 3

 எதிரியின்  திட்டங்கள்  இரகசியங்கள்  யாவும்
 முன்னமே  அறியச்  செய்தீர்
 எவருமே  அறிந்திடா  ஆவியின்  உலகத்தை
 என்  கண்கள்  காணச்செய்தீர்
 அக்கினி  மயமான  குதிரையும்  இரதங்களும்
 எனைச்சுற்றி  நிற்கின்றதே
 அக்கினி  மயமான  நாவுகளைக்  கொண்டு
 அற்புதம்  செய்பவரே  -  2
 
 ----------------------------
 
 Um  samugam  munne  pogum
 Etharkum  bayam  illaiye
 Um  aavi  vellum  kollum
 Paarvon  thadai  illaiye  -  2
 
 Rathangal  muriththu  villai  odittheer
 Um  munne  nirpavan  yaar
 Sengadal  pirinthu  suvarpol  ninrathe
 Ummai  ethirppavan  yaar  -  2
 
 Elshaddai  Elohim...  Yaave  Elohim
 Elshaddai  Elohim...  Yaave  Elohim

Verse 1

 En  kookkural  kettu  perumoochaik  kandu
 Um  tholil  enai  etrineer
 Megaththaalum  agni  sthambaththaalum
 En  dhegam  neer  moodineer
 Uzhaippum  illai  udal  kalaippum  illai
 Um  appam  enakkoottineer
 En  vasthiramum  paadha  iratchaigalum
 Magimaiyaal  puthithaakkineer  -  2

Verse 2

 Enthanin  paadham  patta  udane
 Yordhanum  vilagidume
 Um  yosanaiyaale  ekkaalam  pothum
 Erikovum  vizhundhidume
 En  pattaiyaththirku  thappinath  ellaam
 Kalmazhaikkiraiyaanathe
 En  vaarththaiyinaale  sooriyanum  chandhiranum
 Oridam  ninridume  -  2

Verse 3

 Ethiriyin  thittangal  ragasiyangal  yaavum
 Munname  ariyach  seidheer
 Evarume  arindhidaa  aaviyin  ulagaththai
 En  kangal  kaanach  seidheer
 Akkini  mayamaana  kuthiraiyum  rathangalum
 Enaich  sutri  nirkinrathe
 Akkini  mayamaana  naavugalaik  kondu
 Arputham  seibavare  -  2
#John Jebaraj #Samson Cephas John #Um Samugam Munne Pogum #Praise #Worship #Tamil

Favorites

0