காலையில மறையிற மேகத்தப் போல | Kaalaiyila maraiyira megathap pola | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 5
#200
Font
Chorus
காலையில மறையிற மேகத்தப் போல என் பக்தி இருக்கு
எந்த வேளையிலும் பாவத்துக்கு ஆசைப்பட்டுத்தான் என் புத்தி இருக்கு
ஏமாத்துறேன் நான் ஏமாத்துறேன் – அட
எல்லா ஜனத்தையும் ஏமாத்துறேன்
ஏமாந்துட்டேன் நான் ஏமாந்துட்டேன் – அட
கடைசியில் நான்தானே ஏமாந்துட்டேன்
மந்தைகள பத்தி என்ன கவல – அட
மாசா மாசம் காணிக்கதான் என்னோட mindல
ஆத்துமாவை பத்தி என்ன கவல
இந்த உலகமே மயங்குது என்னோட Styleல
Verse 1
என்னென்னமோ நான் அளக்குறேன் – என்
எண்ணம்போல வேதத்த வெளக்குறேன் – அட
கற்பனையில் பிரசங்கிச்சேன்
விற்பனையில் கண்ண வெச்சேன்
அற்புதங்கள் கர்த்தரோட poweru
அது என்னாலதான் ஆகுதுன்னு சொல்றது Over
தரிசனம் கொடுப்பது கர்த்தரு
அத சொல்லி சொல்லி ஓட்டுரேனே அன்றாடம் Traileru
Verse 2
சத்தியத்த நான் வித்துபுட்டேன்
சொத்து சுகம் நான் சேத்துபுட்டேன்
அட நான் மட்டும்தான் மேடையில
மக்களெல்லாம் பாடையில
காச கொட்டி பட்டம் எல்லாம் வாங்குறேன் – அட
கண்ட நேரம் என்னபத்தி பேசத்தான் ஏங்குறேன்
ஏனோ தானோ ஊழியத்த செய்யுறேன் – அத
கேள்வி கேட்டா மக்கள் மேல சிங்கம்போல் பாயுறேன்
Verse 3
Procedureஆ எல்லாம் மாறிப்போச்சு – என்
பிரசங்கமோ வெறும் வெட்டி பேச்சு
அட தற்பெருமை ஜாஸ்தி ஆச்சு
ஊழியங்கள் நாஸ்தி ஆச்சு
ஆரம்பத்தில் உத்தமமா நடந்தேன் – இப்ப
ஆடம்பர வாழ்கையில அன்றாடம் ஆடுறேன்
ஆண்டவரே கெதியின்னு கிடந்தேன் – இப்ப
ஆனா ஊனா பங்காளரின் வீட்டுக்கு ஓடுறேன்
மொத்தத்துல எல்லாம் நல்ல வேஷம்
என் மேலேயே எனக்கு கள்ள நேசம்
அட ஊருக்குத்தான் உபதேசம்
உள்ளுக்குள்ள ரொம்ப மோசம்
------x------x------x------
Chorus
Kaalaiyila maraiyira megathap pola en bakthi irukku
Endha velaiyilum paavathukku aasaipattuthaan en puthi irukku
Yemaathuren naan yemaathuren – ada
Ellaa janathaiyum yemaathuren
Yemandhutten naan yemandhutten – ada
Kadaisiyil naanthaane yemandhutten
Manthaigala pathi enna kaval – ada
Maasaa maasam kaanikkadhaan ennoda mindla
Aathumaavai pathi enna kaval
Indha ulagame mayangudhu ennoda Stylela
Verse 1
Ennenname naan alakkuren – en
Ennamboola vedhatha velakkuren – ada
Karpanaiyil prasangichen
Virpanaiyil kan vechchen
Arputhangal kartharoda poweru
Adhu ennaala thaan aagudhunu solradhu Over
Darisanam koduppadhu kartharu
Adha solli solli otturene antraadam Traileru
Verse 2
Sathiyatha naan vithuputten
Sottu sugam naan sethuputten
Ada naan mattum thaan medaiyila
Makkalellaam paadaiyila
Kaasa kotti pattam ellaam vaanguren – ada
Kanda neram ennapathi pesathaan yenguren
Yeno thaano oozhiyatha seiyyuren – adha
Kelvi kettaa makkal mela singambol paayuren
Verse 3
Proceduraa ellaam maaripochu – en
Prasangamo verum vetti pechu
Ada tharperumai jaasthi aachu
Oozhiyangal naasthi aachu
Aarambathil uththammaa nadanthen – ippa
Aadambara vaazhkaiyila antraadam aaduren
Aandavare gethinu kidanthen – ippa
Aana oonaa pangaaalin veetukku oduren
Mothathula ellaam nalla vesham
En meleye enakku kallai nesam
Ada oorukkuthaan upadesham
Ullukkulla romba mosam