பரனே என் இதயத்தில் வாரும் | Parane en ithayathil vaarum | Tamil Lyrics

Ravi Bharath

#193
Font

Chorus

 பரனே  என்  இதயத்தில்  வாரும்
 பரநோக்கம்  நிறைவேற்ற  வாரும்  -2
 அனுதினம்  என்மனம்  கழுவிடும்
 அழகிய  புதுமனம்  தந்திடும்
 பரிவுடன்  பாவியை  கண்டிடும்    என்
 சுயமதை  திருசலவை  செய்திடும்

Verse 1

 அதட்டிவிடும்  நெஞ்சை  அகற்றிவிடும்  நஞ்சை
 புகுத்திவிடும்  எனக்குள்  பரமசிந்தை  -2
 பரிசுத்தம்  கேட்கிறேன்  உம்  குழந்தை
 அழுகிய  சிந்தனை  மங்கவே
 மனதினுள்  வசனங்கள்  தங்கவே
 அகமகிழ்ந்தெனதுள்ளம்  பொங்கவே
 அடைக்கலம்  அருளுமே  துங்கவே  -பரனே  என்  இதயத்தில்  ….

Verse 2

 திருக்குள்ளவன்  மிஞ்சும்  கிறுக்குள்ளவன்  கெஞ்சும்
 கரத்துடனே  உம்மிடம்  கதறுகிறேன்  -2
 கிருபை  கிடைக்கத்தானே  பதறுகிறேன்
 புவியதன்  சோதனை  குறையவே
 பரமனின்  போதனை  நிறையவே
 பகலதன்  பிள்ளையாய்  வளரவே
 உலகினில்  தீபமாய்  ஒளிரவே  -பரனே  என்  இதயத்தில்  ….

Verse 3

 மயக்கத்திலே  மனம்  கிரக்கத்திலே  குணம்
 உறக்கத்திலிருந்தென்னை  எழுப்பிவிடும்  –2  கெட்ட
 உணர்ச்சிகள்  அனைத்தையும்  கொளுத்திவிடும்
 அகமதின்  கபடினை  தள்ளவே
 ஆவியின்  கனிதனை  அள்ளவே
 அசுரனை  அனுதினம்  வெல்லவே
 அவனியில்  கிருபையைச்  சொல்லவே  -பரனே  என்  இதயத்தில்  ….
 
 ------x------x------x------
 

Chorus

 Parane  en  ithayathil  vaarum
 Paranokkam  niraivetra  vaarum  -2
 Anudinam  enmanam  kazhuvidum
 Azhagiya  puthumanam  thanthidum
 Parivudan  paaviyai  kandhidum    en
 Suyamadhai  thirusalavai  seithidum

Verse 1

 Athattividum  nenjai  agattrividum  nanjai
 Puguththividum  enakkuL  paramasinthai  -2
 Parisuththam  ketkiren  um  kuzhanthai
 Azhugiya  sinthanai  mangave
 Manadhinaul  vasanangal  thangave
 Agamagizhthenadhuullam  pongave
 Adaikkalam  arulumae  thungave  -Parane  en  ithayathil  ….

Verse 2

 Thirukkullavan  minjum  kirukkullavan  genjum
 Karathudane  ummidam  katharugiren  -2
 Kirupai  kidaikkaththane  patharugiren
 Puviyathan  sothanai  kuraiyave
 Paramanin  pothanai  niraiyave
 Pagaladhan  pillaiyaai  valarave
 Ulaginil  theepamaai  olirave  -Parane  en  ithayathil  ….

Verse 3

 Mayakkathile  manam  kirakkathile  gunam
 Urakkathilirunthenai  ezhuppividum  –2  ketta
 Unarchigal  anaithaiyum  koluththividum
 Agamathin  kapadina  thallave
 Aaviyin  kanithanai  allave
 Asuranai  anudinam  vellave
 Avaniyil  kirupaiyai  sollave  -Parane  en  ithayathil  ….
#Ravi Bharath #Aayathamaa 4 #Tamil #Lyrics

Favorites

0