ரகசியமாய் ஒரு வருகை | Ragasiyaai oru varugai | Tamil Lyrics

Ravi Bharath

#194
Font

Chorus

 ரகசியமாய்  ஒரு  வருகை
 அனைவரும்  காணும்  ஒரு  வருகை
 இரண்டுக்கும்  நடுவே  உபத்திரவம்
 அதன்  நடுவில்  மகா  உபத்திரவம்
 சபையை  தமக்கென  எடுத்துக்கொள்ளவே
 வருகிறார்  இரகசியமாய்
 சபையை  தம்மோடு  அழைத்து  வருகிறார்
 வெளியரங்கமாய்
 நடுவிலே  ஏழு  வருடம்  கடந்து  போகுதே
 அதில்  மிகுதியாய்  பாடுகள்  புவியில்
 தோன்றுதே

Verse 1

 நொடிப்பொழுதினிலே  வேறொரு  ரூபமாய்
 மாறிடுவோம்  இரகசியமாய்
 ஏழு  வருடங்கள்  கழித்து  திரும்புவோம்
 வெளியரங்கமாய்
 கர்த்தருக்குள்  மரித்துப்போனால்  நல்லொரு
 சாதனைதான்-  இந்த
 இரட்சிப்பை  நீ  அசட்டைசெய்தால்  நரக
 வேதனைதான்

Verse 2

 ஆரவாரத்தோடும்  தூதன்  சத்தத்தோடும்
 எக்காளதொனியோடும்  இறங்கி  வருகிறார்
 யாரும்  அறியா  நேரம்  இவைகள்  நடந்தேறும்
 காத்திருந்தால்  உன்னை  அழைத்துச்  செல்லுவார்
 இது  ரகசிய  வருகை
 ஒரு  அதிசய  வருகை

Verse 3

 தீர்க்கதரிசி  சொன்ன  இறுதி  ஏழு  வருடம்
 அந்திகிறிஸ்து  தன்னை  உயர்த்திக்  கொள்கிறான்
 மூன்றரை  ஆண்டு  காலம்  முடிந்த  பின்னே  அவனும்
 பாழாக்கும்  அருவருப்பை  உயர்த்தி  வைக்கிறான்
 அதை  கண்கள்  யாவும்  காணும்
 அது  முடிவு  நெருங்கும்  காலம்

Verse 4

 இயேசுவே  ரட்சகர்  என்பதை  நம்பி  நீ
 மன்றாடி  மன்னிப்பை  பெற்றுக்கொள்  இன்றே  நீ
 குற்றங்கள்  ஒப்புக்கொள்  வாழ்க்கையை  மாற்றிக்கொள்
 வேறொன்றும்  வேண்டாமே  வேண்டுதல்  கேட்பாரே

Verse 5

 இன்றைக்கே  வந்தாலும்  ஆச்சரியம்  இல்லையே
 ஆயத்தமாக  நீ  நின்றாலே  தப்பித்தாய்
 சட்டென்று  செல்லுவாய்  கர்த்தரை  சந்திப்பாய்
 மேகத்தில்  உன்னைப்போல்  நம்பினோர்
 நிற்பாரே

Verse 6

 இயேசுவை  நம்பாமல்  இரட்சிப்பு  இல்லாமல்
 மோட்சத்தை  எண்ணாதே  மோசமாய்  போகாதே
 யாக்கோபின்  கஷ்டத்தை  சந்திக்க  நாடாதே
 சாத்தானின்  முத்திரை  பெற்றுத்தான்  மாளாதே
 நித்திய  அக்கினி  உனக்கு  வேண்டாமே
 சத்திய  வேதத்தின்  வார்த்தையை  நம்பியே  வா
 பரலோகம்  ஒருபுறத்தில்
 பாடுகள்  புவியில்  மறுபுறத்தில்
 விழிப்புடன்  இருந்தால்  நீ  பிழைத்திடுவாய்
 வரப்போகும்  ஆக்கினைக்கு  தப்பித்துக்கொள்வாய்
 ------x------x------x------

Chorus

 Ragasiyaai  oru  varugai
 Anaivarum  kaanum  oru  varugai
 Irandukkum  naduve  upaththiravam
 Adhan  naduvil  mahaa  upaththiravam
 Sabhaiyai  thamakkena  eduthukollave
 Varugiraar  ragasiyaamai
 Sabhaiyai  thammodu  azhaithu  varugiraar
 Veliyarangamaai
 Naduvile  ezhu  varudam  kadanthu  pogudhe
 Adhil  migudhiyaai  paadugal  puviyil
 Thondrudhe

Verse 1

 Nodippozhudhinile  veroru  roopamaai
 Maariduvom  ragasiyaamai
 Ezhu  varudangal  kazhithu  thirumbuvom
 Veliyarangamaai
 Kartharukkul  marithuponaal  nalloru
 Saadhanai  dhaan-  indha
 Iratchippai  nee  asattaiseithaal  naraga
 Vedhanaithaan

Verse 2

 Aaravaaraththodum  thoothan  saththaththodum
 Ekkaalathoniyodum  irangi  varugiraar
 Yaarum  ariyaa  neram  ivaigal  nadandherum
 Kaaththirundhaal  unnai  azhaithu  selluvaar
 Idhu  ragasiya  varugai
 Oru  adhisaya  varugai

Verse 3

 Theerkkatharisi  sonna  irudhi  ezhu  varudam
 Anthikristhu  thannai  uyarthi  kolkiraan
 Moondraaraai  aandu  kaalam  mudindha  pinne  avanum
 Paazaakkum  aruvaruppai  uyarthi  vaikkiraan
 Adhai  kangal  yaavum  kaanum
 Adhu  mudivu  nerungum  kaalam

Verse 4

 Iyesuve  ratchagar  enbadhai  nambi  nee
 Mantraadi  mannippai  pertrukkol  indre  nee
 Kuttrangal  oppukkol  vaazhkaiyai  maatthikkol
 Verontrum  vendaame  vendudhal  ketpaare

Verse 5

 Indraikke  vandhaalum  aachariyam  illaiye
 Aayaththaamaa  nee  nindraale  thappithaai
 Sattendru  selluvaai  kartharai  sandhippaai
 Megathil  unnaipol  nambinor
 Nirpaare

Verse 6

 Iyesuvai  nambaamal  iratchippu  illaamal
 Mochathai  ennadhe  mosamaai  pogaadhe
 Yaakkobin  kashtathai  sandhikka  naaadathe
 Saathaanin  muththirai  pettrudhaan  maalaadhe
 Niththiya  akkini  unakku  vendaame
 Saththiya  vedhaththin  vaarthaiyai  nambiyae  vaa
 Paralogam  orupurathil
 Paadugal  puviyil  marupurathil
 Vizhippudan  irundhaal  nee  pizhaithiduvaai
 Varappogum  aakkinaiykku  thappithukkolvaai
#Ravi Bharath #Aayathamaa 4 #Tamil #Lyrics

Favorites

0