சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே | Suththa irudhayathai sirushtiyume | Tamil Lyrics

Ravi Bharath

#204
Font

Chorus

 சுத்த  இருதயத்தை  சிருஷ்டியுமே
 செத்த  மனிதனை  உயிர்ப்பியுமே
 சிக்குண்டு  தவிக்கிறேன்  உலகினிலே
 சீக்கிரம்  வந்து  என்னை  தப்புவியுமே

Verse 1

 பாவங்கள்  நீங்க  என்னை  சுத்திகரியும்
 அக்கிரமம்  நீங்க  என்னை  கழுவிவிடும்
 மீறுதல்  அறிந்தேன்  பாவங்கள்  தெரிந்தேன்
 கண்முன்னே  பொல்லாங்கினை  நடத்திவிட்டேன்
 உம்முன்னே  பாவங்களை  உடுத்திவிட்டேன்

Verse 2

 உள்ளத்தில்  உண்மைதனை  விரும்புகிறீர்
 ஞானத்தை  என்னிடத்தில்  விளம்புகிறீர்
 சுத்திகரித்திடும்  குற்றம்  எரித்திடும்
 வெண்மழைபோல  என்னை  வெண்மையாக்கிடும்
 கன்மலை  நீரென்னை  நல்தன்மையாக்கிடும்

Verse 3

 நல்  இதயத்தை  என்னில்  சிருஷ்டியுமே
 உள்  இதயத்தில்  ஆவி  புதுப்பியுமே
 பாவியை  தள்ளாதீர்  ஆவியை  அள்ளாதீர்
 ரட்சிப்பின்  சந்தோஷத்தை  எனக்கு  தாரீர்
 உற்சாக  ஆவி  என்னை  தாங்கச்  செய்குவீர்

Verse 4

 வெட்டுண்ட  ஆவிதனை  ஏற்றுக்கொள்கிறீர்
 கட்டுண்ட  பாவிதனை  தேற்றிச்செல்கிறீர்
 பாவப்பழிகளை  நீக்கிடும்  ஐயனே
 பொய்யனை  மாற்றும்  பரலோக  மெய்யனே
 கெம்பீரித்தும்மை  பாடி  போற்றிடுவேனே
 
 ------x------x------x------
 

Chorus

 Suththa  irudhayathai  sirushtiyume
 Settha  manithanai  uyirppiyume
 Sikkundu  thavikkiren  ulaginale
 Seekkiram  vandhu  ennai  thappuviyume

Verse 1

 Paavangal  neenga  ennai  suththikariyum
 Akiramam  neenga  ennai  kazhuvividum
 Meerudhal  arindhen  paavangal  therindhen
 Kanmunne  pollaanginai  nadathivitten
 Ummunne  paavangalai  uduthivitten

Verse 2

 Ullathil  unmaithanai  virumbugireer
 Gnaanathai  ennidathil  vilambugireer
 Suththikarithidum  kuttram  erithidum
 Venmazhaipola  ennai  venmaiyaakkidum
 Kanmalai  neerennai  nalthanmaiyaakkidum

Verse 3

 Nal  ithayathai  ennil  sirushtiyume
 Ul  ithayathil  aavi  puthuppiyume
 Paaviyai  thallaadheer  aaviyai  allaadheer
 Ratchippin  santhoshathai  enakku  thaareer
 Utsaaga  aavi  ennai  thaanga  seiguveer

Verse 4

 Vettunda  aavidhanai  yetrukkolgireer
 Kattunda  paavidhanai  thetrichselgireer
 Paavapazhigalai  neekkidum  aiyaney
 Poiyyanai  maattrum  paraloga  meiyaney
 Kembeeriithummai  paadi  pothriduveney
#Ravi Bharath #Aayathamaa 5 #Tamil #Lyrics

Favorites

0