Aathumaave nandri sollu | ஆத்துமாவே நன்றி சொல்லு | FR.S.J.BERCHMANS Lyrics
Father Berchmans
Key: Em
#42
Font
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே – 2
குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே – 2
கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்
இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை – 2
---------------------------
Aathumaave nandri sollu
Muzhu ullathode – en
Karthar seidha nanmaigalai
Oru naalum maravaadhe – 2
Kuthrangalai mannithaare
Noigalai neekkinaare
Paduguzhiyinindru meettaare
Jeevanai meettaare – 2
Kirubai irakkangalaal
Manimudi soottugindraar
Vaazhnaalellaam nanmaigalaal
Thirupthi aakkugindraar
Ilamai kazhugu pola
Pudhithaakki magizhkindraar – nam
Oodinaalum nadandhaalum
Belan kuraivadhillai – 2